ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளால் ஏற்பட்ட பாதிப்புகளால் அரிசிக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் செயலர் கூறுகையில், இப்போது வழக்கமான அரிசியின் பாதி மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது என்று கூறினார். அங்குள்ள மளிகை கடைக்காரர்கள், ஒரு நாளைக்கு ஒரு பை அரிசி மட்டுமே வாங்குங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். அரசு நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளை எதிர்நோக்கிய நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் அரிசியை சேமிக்கத் தொடங்கினர். வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் வெளிநாட்டு சுற்றுலா தேவையால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சர், நிலைமை விரைவில் சீராகும் எனத் தெரிவித்தார்.