அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்பு இல்லை

November 24, 2022

அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வேயில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சென்னை ஐசிஎப்-பில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. மாதத்துக்கு 7 முதல் 8 ரயில்களை தயாரித்தால் மட்டுமே, இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால், இப்போது அதை விட […]

அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வேயில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சென்னை ஐசிஎப்-பில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. மாதத்துக்கு 7 முதல் 8 ரயில்களை தயாரித்தால் மட்டுமே, இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால், இப்போது அதை விட குறைவாகவே ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தடுத்து கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், வசதிகள் ரயில்களில் சேர்க்கப்பட்டு வருவதால் தயாரிப்பில் தாமதம் ஏற்படுகிறது.

18 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயில், முதலில் ரூ.106 கோடியில் தயாரிக்கப்பட்டது. தற்போது ரூ.110 கோடி செலவாகிறது. புதிய வசதிகள், தொழில்நுட்பங்கள் இணைக்கப்படுவதால் இந்த செலவுத் தொகை ரூ.120 கோடியை எட்டும் நிலை உருவாகி இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu