மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை

நூற்பாலைகள் மே மாதத்திற்கான நூலின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என அறிவித்துள்ளது. பின்னலாடை தயாரிப்பிற்கு நூல் மிகவும் முக்கிய பொருளாக இருந்து வருகிறது. இதன் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆர்டர்களை பெறும் நிறுவனங்கள் நூல் விலையை கணக்கிட்டு ஆர்டர்களின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். பின்னர் ஆடர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூலின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில் துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து […]

நூற்பாலைகள் மே மாதத்திற்கான நூலின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என அறிவித்துள்ளது.

பின்னலாடை தயாரிப்பிற்கு நூல் மிகவும் முக்கிய பொருளாக இருந்து வருகிறது. இதன் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆர்டர்களை பெறும் நிறுவனங்கள் நூல் விலையை கணக்கிட்டு ஆர்டர்களின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். பின்னர் ஆடர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூலின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில் துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். மேலும் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில் ஆடைகளின் விலை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால் ஆர்டர்கள் ரத்தாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் நடப்பு மாதத்திற்கான நூல் விலைகளை அறிவித்துள்ளனர். அதில் கடந்த மாத விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 30 எண்ணுக்கு அதிகமான நூல்கள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu