குரூப் 2 பதவிகளுக்கான மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு அறிவிப்பு

March 21, 2024

குரூப் 2 பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மே மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கான முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 இல் பிரதான தேர்வு நடைபெற்றது. இதில் முன்னிலை பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு அடங்கிய 161 பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள 29 இடங்களை நிரப்புவதற்கு […]

குரூப் 2 பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 மே மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கான முதல்நிலை தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 இல் பிரதான தேர்வு நடைபெற்றது. இதில் முன்னிலை பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு அடங்கிய 161 பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள 29 இடங்களை நிரப்புவதற்கு முன்னிலை தரவரிசையில் உள்ள விண்ணப்பதாரர்கள் முன் வரவில்லை. இதனால் மூன்றாம் கட்ட தேர்வு நடத்தி காலி பணியிடங்களை நிரப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கு பதிவு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்முக தேர்வு இல்லாத பதவிகளுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை விபரம் அடுத்த மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu