சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் மோடி அறிவிப்பு

September 5, 2024

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு மேற்கொண்ட 2 நாள் அரசுமுறை பயணத்தின் போது, அந்நாட்டில் முதலாவது சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. உலகெங்கிலும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சி, பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. திருவள்ளுவர் கலாசார மையம், தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றைப் பரப்புவதற்கான […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூருக்கு மேற்கொண்ட 2 நாள் அரசுமுறை பயணத்தின் போது, அந்நாட்டில் முதலாவது சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. உலகெங்கிலும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சி, பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. திருவள்ளுவர் கலாசார மையம், தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றைப் பரப்புவதற்கான ஒரு முக்கிய மையமாக விளங்கும். இது, தமிழ் பேசும் மக்களிடையே பாலத்தை ஏற்படுத்துவதோடு, உலகெங்கிலும் தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu