கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ - ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் ஊற்றப்பட்டு, தீ ஏற்பட்டுள்ள பகுதிக்குள் உள்ள வீடுகளை சென்றடைய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 26000 பேர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 5.5 சதுர […]

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் ஊற்றப்பட்டு, தீ ஏற்பட்டுள்ள பகுதிக்குள் உள்ள வீடுகளை சென்றடைய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 26000 பேர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 5.5 சதுர மைல் பரப்பளவுக்கு புகைமண்டலம் ஏற்பட்டுள்ளது. இதனை விண்வெளியில் இருந்து கூட காண முடிவதாக சொல்லப்படுகிறது. தீயை முழுமையாக அணைக்கும் போராட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu