பைஜூஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 3 நிர்வாக குழு உறுப்பினர்கள் - டெலாய்ட் நிறுவனமும் வெளியேறியது

June 23, 2023

பைஜூஸ் நிறுவனத்தின் நிர்வாகக்குழு வாரியத்தில் இருந்து 3 முக்கிய உறுப்பினர்கள் வெளியேறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், பைஜூஸ் நிறுவனத்தின் கணக்காளர் நிறுவனமாக செயல்பட்டு வந்த டெலாய்ட் நிறுவனம், பைஜூஸ் நிறுவனத்தின் பணிகளில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்கள் ஆகியோருடன் சச்சரவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் நிறுவனத்திற்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் ஐ சேர்ந்த ஜீவி ரவிசங்கர், ப்ராசஸ் ஐ சேர்ந்த […]

பைஜூஸ் நிறுவனத்தின் நிர்வாகக்குழு வாரியத்தில் இருந்து 3 முக்கிய உறுப்பினர்கள் வெளியேறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், பைஜூஸ் நிறுவனத்தின் கணக்காளர் நிறுவனமாக செயல்பட்டு வந்த டெலாய்ட் நிறுவனம், பைஜூஸ் நிறுவனத்தின் பணிகளில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்கள் ஆகியோருடன் சச்சரவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் நிறுவனத்திற்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் ஐ சேர்ந்த ஜீவி ரவிசங்கர், ப்ராசஸ் ஐ சேர்ந்த ரசல் திரேசன்ஸ்டாக், சான் ஜூக்கர்பர்க் ஐ சேர்ந்த விவியான் வூ ஆகிய மூவரும் பைஜூஸ் நிர்வாகக்குழு வாரியத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்கள் வெளியேறியதற்கு பைஜூஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியேற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய நிலையில், பைஜூஸ் நிர்வாக குழு வாரியத்தில், நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu