ஜொமாட்டோவில் இருந்து வெளியேறியது டைகர் குளோபல்

August 29, 2023

ஜொமாட்டோ நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை டைகர் குளோபல் விற்பனை செய்து வந்தது. அந்த வகையில், டைகர் குளோபலின் பிரிவான இன்டர்நெட் ஃபண்ட் III பிரைவேட் லிமிடெட், ஜொமாட்டோ பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், ஜொமாட்டோ நிறுவனத்திடம் இருந்த அனைத்து பங்குகளையும் டைகர் குளோபல் வெளியேற்றி, நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறி உள்ளது. நேற்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையில், பல்க் டீல் மூலம் ஜொமாட்டோ பங்குகள் விற்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1.44% பங்குகள் […]

ஜொமாட்டோ நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளை டைகர் குளோபல் விற்பனை செய்து வந்தது. அந்த வகையில், டைகர் குளோபலின் பிரிவான இன்டர்நெட் ஃபண்ட் III பிரைவேட் லிமிடெட், ஜொமாட்டோ பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், ஜொமாட்டோ நிறுவனத்திடம் இருந்த அனைத்து பங்குகளையும் டைகர் குளோபல் வெளியேற்றி, நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறி உள்ளது.

நேற்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையில், பல்க் டீல் மூலம் ஜொமாட்டோ பங்குகள் விற்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1.44% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக, ஒரு பங்கு 91.01 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. மொத்தம் 123486408 பொது பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜொமாட்டோவின் பங்குகளை, ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐ சி ஐ சி ஐ ப்ருடன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், மோர்கன் ஸ்டான்லி ஆசியா சிங்கப்பூர், ஃபவுண்டர்ஸ் கலெக்டிவ் ஃபண்ட், சூசெட் ஜெனரல் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu