தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு

March 20, 2024

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் பேரில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. மேலும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் மனுத்தாக்கல் உடன் தீவிர பிரச்சாரத்தை தொடங்க ஏற்பாடு […]

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் பேரில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீடு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. மேலும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் மனுத்தாக்கல் உடன் தீவிர பிரச்சாரத்தை தொடங்க ஏற்பாடு செய்வார்கள். தேர்தலுக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பிரச்சார வாகனத்தின் வண்ணப் புகைப்படம், பதிவு சான்றிதழ், வாகன காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகையளவு சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .இவை இல்லாத வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu