78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் பிரதான விழாவில் பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி, தனது 11வது சுதந்திர தின உரையை வழங்குகிறார். ‘விக்சித் பாரத்’ என்ற தீவிர கருத்தோடு கொண்டாடப்படும் விழாவின் முன்னர், செங்கோட்டையில் முழு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் செய்யப்பட்டது. மேலும் டெல்லியில் பாதுகாப்புக்காக ,3500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.