மனை பிரிவு அங்கீகாரத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு

September 1, 2023

அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் தனி மனைகள் அங்கீகாரம் பெற ஆறு மாத காலம் அவகாசம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கட்டிட பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 44 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 18 கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது எனவும் மீதமுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.இதில் 12 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதி இருந்த நிலையில் அதை 13,14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்று […]

அங்கீகரிக்கப்படாத மனைபிரிவுகள் மற்றும் தனி மனைகள் அங்கீகாரம் பெற ஆறு மாத காலம் அவகாசம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டிட பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 44 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 18 கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது எனவும் மீதமுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.இதில் 12 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதி இருந்த நிலையில் அதை 13,14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுரை, திருவண்ணாமலை போன்ற கோயில் நகரங்களில் தொடர் கட்டிட கட்டுமானத்திற்கு கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க எந்த இடங்களில் தொடர் கட்டுமானங்கள் தேவை என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் ஏழு சதவீதம் அளவிலான நிலத்திற்கு மட்டுமே பெருந்திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 23 திட்டங்கள் முடியும் நிலையில் உள்ளன. கட்டிடம் கட்டும் போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் என்றும் முன் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் நிறைவு சான்றிதழ் பெற முடியாது, சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட அங்கீகாரம் செய்யப்படாத மனை பிரிவு மற்றும் தனியார் மனைகளுக்கு அங்கீகாரம் பெற ஆறு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu