திருப்பதி திருமலையில் வழங்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
ஆந்திராவில், திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆய்வில், லட்டுவுக்காக தேவைப்படும் நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, பக்தர்களின் நம்பிக்கையை மிகுந்த அளவு பாதித்துள்ளது.