திருப்பதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 47 கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் உள்ள சேஷா சலம் பகுதியில் செம்மரக்கட்டைகள் நிறைய விளைகின்றன. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செம்மர கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு பல முயற்சிகள் எடுத்த வண்ணம் இருந்தாலும் செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க இயலவில்லை. இதற்கு வெளிநாடுகளில் அதிக விலை கிடைப்பதால் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செம்மரம் கடத்தல் கார்கள் மரங்களை வெட்டி கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 47 கூலித்தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டி கடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் கைது செய்துள்ளனர்.