டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
நெல்லையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 23 வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 189 ரன்களை குவித்தது. அதனை அடுத்து களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே குவித்தது. கடைசி ஓவர் வரை சென்ற திருப்பூர் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.