அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கியில் இருந்தவர்கள், விபத்துக்கு முன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று கடைசியாக செய்தி அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க கடலோர காவல் படையின் ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கி கடலுக்குள் வெடித்து சிதறியதால் அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். ஆய்வாளர்கள் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்களை படம் பிடித்துள்ளனர். டைட்டன் நீர்மூழ்கி பயன்படுத்தப்படுவதற்கு முன் போதுமான சோதனை செய்யப்படவில்லை என்றும், பல முறை தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. டைட்டன் நீர்மூழ்கியை உற்பத்தி செய்த ஓஷன் கேட் நிறுவனம், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.