அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

August 31, 2024

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) திறன்களை 20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை முதல்வர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு கூகுளின் உதவியுடன் ஏ.ஐ. பயிற்சி வழங்கப்படும். 6 நிறுவனங்களுடன் மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை […]

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) திறன்களை 20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை முதல்வர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு கூகுளின் உதவியுடன் ஏ.ஐ. பயிற்சி வழங்கப்படும். 6 நிறுவனங்களுடன் மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைப்பது, ஸ்டார்ட்-அப்புகளுடன் இணைந்து செயல்படுவது, எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் இடம்பெறும். சென்னை, கோவை மற்றும் மதுரை நகரங்களில் புதிய நிறுவனங்கள் அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழகம் டிரில்லியன் டாலர் பொருளாதார நோக்குடன் முன்னேறுவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu