சென்னை நகரில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பகுதியில் ரயில் நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் தெற்கு ரயில்வே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது சுமார் 88 ஏக்கர் நிலத்தில் 400 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த நிலையும் திறக்கப்பட உள்ளது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் கிளாம்பாக்கம் வருவதற்கு பெரும்பாலும் சாலை வழியாக பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் ஒரு ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தெற்கு ரயில்வே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதற்கு தமிழக ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான செலவை மாநில அரசு முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளது.