டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் கோவை மற்றும் மதுரை அணைகள் மோதியது.
நெல்லையில் எட்டாவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் மதுரை மற்றும் கோவை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மதுரை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய கோவை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய மதுரை அணி வீரர்கள் கோவையின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மதுரை அணி 120 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கோவை அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் போட்டிகளுக்கு முதல் அணியாக தொகுதி பெற்றுள்ளது.