டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டி. என். பி. எஸ்.சி தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் தேர்வின் போது வழங்கப்பட்ட குறியீட்டுக் கொண்ட வினாத்தாள் தொடர்பாக, தேர்வர்கள் தங்கள் மறுப்புகளை www.tnpsc.gov.in இணையதளத்தில் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 30-ந்தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு கிடைக்கும் கோரிக்கைகளும் ஏற்க முடியாது. இறுதி விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.