சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56,800-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு மற்றும் இஸ்ரேல்-லெபனான் போர் போன்ற உலகளாவிய காரணிகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான தேவை அதிகரித்து விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.102 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.