பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 - ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய அம்சமாக மணிப்பூர் கலவரம் இருந்து வந்தது. இதில் எதிர்க்கட்சிகள் அனைவரும் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்தனர். இதன் பின்னான அனைத்து பிரச்சனைகளிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்தே குரல் கொடுத்து வந்தனர்.
இதில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு அவரின் எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டது மேலும் கூடுதல் பலத்தை சேர்த்தது. எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இருந்தாலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறிதும் தயங்காமல் பதில் கூறி வருகின்றனர். மேலும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் மணிப்புரி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கைக்கு சபாநாயகர் கடைசி வரை அனுமதி அளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் இன்று இதன் கடைசி நாளான இன்று ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள் போன்ற சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.