ஹுருன் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நிகழாண்டில் 102 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இடம் பெற்றுள்ளனர். மேலும் இடம் பெற்றுள்ள கோடீஸ்வரர்களில் 79% பெயர் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மேலும் கூறும் அறிக்கையில் வெளியான தகவலின்படி வெளிநாடு வாழ் இந்திய கோடீஸ்வரர்களின் முதல் விருப்பமாக அமெரிக்கா உள்ளது பட்டியலில் இடம் பிடித்துள்ள 46 பேர் அமெரிக்காவில் உள்ளனர் அமெரிக்காவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவை உள்ளன
வெளிநாடு வாழ் இந்திய குடும்பங்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டது கோபிசந்த் தலைமையிலான ஹிந்துஜா குழுமம் ஆகும். குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 1,92,700 கோடி. ஐக்கிய ராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட எல்என் மித்தல் மற்றும் குடும்பம் ரூ. 1,60,900 கோடியுடன் 2வது இடத்தில் உள்ளனர். பிற முக்கிய என்ஆர்ஐகளில் அனில் அகர்வால் (ரூ. 1,11,400 கோடி), ஷாப்பூர் பலோன்ஜி மிஸ்திரி (ரூ. 91,400 கோடி), ஜெய் சௌத்ரி (ரூ. 88,600 கோடி) உள்ளிட்டோர் அடங்குவர்.