தேசிய ஸ்மார்ட் சிட்டிக்கான விருதுகள் போட்டியில் முதல் மூன்று இடங்களை இந்தூர், சூரத், ஆக்ரா நகரங்கள் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதில் அந்தந்த நகரங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வைபை வசதிகள், இன்டர்நெட் இணைப்பு போன்ற நவீன வசதிகளை மத்திய அரசு அமைத்து தருகிறது. இந்த முறை நான்காவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் நகரம் முதலிடத்தையும், குஜராத்தை சேர்ந்த சூரத் இரண்டாவது இடத்தையும், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆக்ரா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த மூன்று விருது பெற்ற நகரங்களுக்கும் இந்தியா ஸ்மார்ட் நகரம் போட்டி விருதுகளை ஜனாதிபதி முர்மு இந்தூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்க உள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மாநிலம் கூட்டாக பெற்றுள்ளன. யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தை பெற்றுள்ளது.