3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இடமாறுதல்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்ககங்கள் ஆகியவற்றில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் பணியாளர்களுக்கு இடம் மாறுதல் வழங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் அல்லது பணியிடத்தில் இல்லாமல், பணியாளர்களை மாறுதல் செய்திடவும், விருப்பம் மாறுதல் வழங்கிடவும் தமிழ்நாடு அரசால் பல்வேறு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அவ்வகையில் தற்போது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்கங்கள் ஆகியவற்றுள் கடந்த மூன்று […]

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்ககங்கள் ஆகியவற்றில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் பணியாளர்களுக்கு இடம் மாறுதல் வழங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் அல்லது பணியிடத்தில் இல்லாமல், பணியாளர்களை மாறுதல் செய்திடவும், விருப்பம் மாறுதல் வழங்கிடவும் தமிழ்நாடு அரசால் பல்வேறு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அவ்வகையில் தற்போது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்கங்கள் ஆகியவற்றுள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் பணிபுரிபவர்களின் விவரங்களை பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்குள் இந்த விவரங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், எவ்வித விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu