ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்கள் நடந்த திருநங்கைகளுக்கு அனுமதி

தெலுங்கானாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் நடத்துவதற்கு திருநங்கைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தெலுங்கானாவில் தேசிய விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர்கள் மூலம் திருநங்கைகளுக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கானா சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி கலந்து கொண்டார். தெலுங்கானா மாநில அரசு திருநங்கைகளுக்கு வறுமை மற்றும் பாகுபாடுகளில் இருந்து மீட்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் […]

தெலுங்கானாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் நடத்துவதற்கு திருநங்கைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

தெலுங்கானாவில் தேசிய விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தில் உணவு வணிக ஆபரேட்டர்கள் மூலம் திருநங்கைகளுக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கானா சாலை மற்றும் கட்டிடங்கள் துறை மந்திரி கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி கலந்து கொண்டார்.

தெலுங்கானா மாநில அரசு திருநங்கைகளுக்கு வறுமை மற்றும் பாகுபாடுகளில் இருந்து மீட்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் நடத்த அனுமதி அளித்திருந்தது. அதன்படி
நேற்றைய விழாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் நடத்துவதற்கான ஆணையை கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி வழங்கினார். மேலும் அவருடைய அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கு 20 லட்சம் மதிப்பிலான காசோலை மற்றும் தனியார் அறக்கட்டளை மூலம் 40 லட்சம் செலவில் இரண்டு இடங்களில் உணவகங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில் முழுவதும் திருநங்கைகள் மட்டுமே பணியாற்ற உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu