வருகிற ஜூன் 11ம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறந்துவைக்கப்பட்டு அதற்கான நிறைவு பணிகள் நடைபெற்று வந்தன. இதன் பயன்பாட்டிற்கான தேதி நிர்ணயம் செய்யப்படாமல் இருந்ததால் இதனை செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 11ம் தேதி முதல் இந்த புதிய விமான முனையம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த புதிய முனையத்தில் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஜூன் 11ஆம் தேதி காலை 6 மணி முதல் விமான முனையம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது