திருச்சி-பேங்காக் நோக்கி புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பேங்காக்கிற்கு புதிய விமான சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்களின் கூட்டிணைவாக செயற்படுத்தப்படுகிறது. மேலும் இந்த விமான சேவை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:35 மணிக்கு மற்றும் 11:05 மணிக்கு திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு புறப்படும். அதன்படி நேற்று 176 பயணிகளை கொண்டு விமான சேவை தொடங்கியது.