திருச்சி காவிரி பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

திருச்சி காவிரி பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலமும் திகழ்கிறது. திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. பழமையாக திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி முதல் பாலம் மூடப்பட்டது. காவிரி பாலத்தில் 6 […]

திருச்சி காவிரி பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலமும் திகழ்கிறது. திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. பழமையாக திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி முதல் பாலம் மூடப்பட்டது. காவிரி பாலத்தில் 6 மாதங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் இன்று திறக்கப்பட்டது. ரூ.6.84 கோடியில் சீரமைக்கப்பட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu