அசாமில் திரிணாமுல் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா விலகியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரிபுன் போரா திடீரென தனது பதவியை விலக்கினார். இதற்காக அவர் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியின் முன்னேற்றத்திற்கு பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர், கட்சியின் பிராந்திய நிலையை மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கினாலும், அதை மேம்படுத்த முடியவில்லையென கூறியுள்ளார். ரிபுன் போரா, திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.