மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25% வரியை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த வரிக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாற்றப்பட்டுள்ளது. மெக்சிகோ, அமெரிக்க எல்லையில் 10,000 ராணுவத்தினரை நியமிக்க ஒப்புக்கொண்டதாலும், கனடா 1.3 பில்லியன் டாலர் செலவில் […]

மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25% வரியை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த வரிக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாற்றப்பட்டுள்ளது. மெக்சிகோ, அமெரிக்க எல்லையில் 10,000 ராணுவத்தினரை நியமிக்க ஒப்புக்கொண்டதாலும், கனடா 1.3 பில்லியன் டாலர் செலவில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாக உறுதியளித்ததாலும், இந்த தளர்வு கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 10% வரி அமலுக்கு வருவதாகத் தெரிகிறது. இது குறித்து டிரம்ப் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. சீன அதிபருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu