ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் ரஷ்ய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனி, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக அமெரிக்க சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலரஸை சேர்ந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 26 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இந்த கைதிகள் பரிமாற்றத்தில் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் இவன், அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் வீலன் உள்ளிட்டோரும் அடங்குவர்.
அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் ரஷ்யா திரும்பினர். அவர்களை ரஷ்ய அதிபர் புதின் வரவேற்றார். ரஷ்யாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர். அவர்களை அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.