துருக்கி உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

April 1, 2024

துருக்கி உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. துருக்கியில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. சுமார் 60% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதில் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் மேயர் பதவிக்கு எர்டோகன் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர். இஸ்தான்புலில் குடியரசு மக்கள் கட்சி சார்பில் தற்போதைய மேயர் இமாமோக்ளூ போட்டியிட்டு உள்ளார். அவர் முன்னிலை பெற்றுள்ளார். அங்காராவில் மான்சூர் எவாஸ் பெரும் வாக்கு வித்தியாசத்தில் […]

துருக்கி உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.

துருக்கியில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. சுமார் 60% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதில் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் மேயர் பதவிக்கு எர்டோகன் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர். இஸ்தான்புலில் குடியரசு மக்கள் கட்சி சார்பில் தற்போதைய மேயர் இமாமோக்ளூ போட்டியிட்டு உள்ளார். அவர் முன்னிலை பெற்றுள்ளார். அங்காராவில் மான்சூர் எவாஸ் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். மொத்தம் 81 மாகாணங்கள் உள்ளது. அதில் 36 இல் குடியரசு மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்கட்சிகளிடம் நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை தற்போதைய அதிபர் எர்டோகன் இழந்தார். இம்முறை அதனை மீட்டெடுக்க எண்ணினார். ஆனால் மீண்டும் தோல்வியே கிடைத்துள்ளது. அவர் இஸ்தான்புல் மேயர் பதவியில் 1994 வெற்றி பெற்று அரசியல் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசியல் சூழல் குறித்து சி ஹெச் பி தலைவர் ஒஸ்குர் ஒசேல் கூறியிருப்பதாவது, துருக்கியில் ஒரு புதிய அரசியலை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்நாட்டின் 22 வருட பிம்பத்தை அவர்கள் மாற்ற முடிவு செய்துவிட்டனர். இனி புதிய சூழல் உருவாகும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu