ஈராக்கில் உள்ள குர்தீஷ் நிலைகள் மீது துருக்கி தாக்குதல்

March 20, 2024

துருக்கி ராணுவம் குர்தீஷ் போராளிகள் குழுவின் நிலைகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈராக் நாட்டை சேர்ந்த குர்தீஷ் அமைப்பினர் துருக்கி அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதனை பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்துள்ளது. இவர்கள் துருக்கி மற்றும் ஈராக் இடையே எல்லையில் செயல்பட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஈராக் அரசால் அவர்களை எதுவும் செய்ய இயலவில்லை. இந்நிலையில், குர்தீஷ் போராளிகள் திடீரென […]

துருக்கி ராணுவம் குர்தீஷ் போராளிகள் குழுவின் நிலைகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

ஈராக் நாட்டை சேர்ந்த குர்தீஷ் அமைப்பினர் துருக்கி அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதனை பயங்கரவாத அமைப்பாக துருக்கி அறிவித்துள்ளது. இவர்கள் துருக்கி மற்றும் ஈராக் இடையே எல்லையில் செயல்பட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் தன்னாட்சி பெற்ற சுதந்திர அமைப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஈராக் அரசால் அவர்களை எதுவும் செய்ய இயலவில்லை.

இந்நிலையில், குர்தீஷ் போராளிகள் திடீரென துருக்கி ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக துருக்கி ராணுவம் குர்தீஷ் போராளிகள் குழுவின் நிலைகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் காரா, ஜாப், மெட்டினா போன்ற பகுதிகளில் நடைபெற்றது. போராளிகளின் முகாம்கள் மற்றும் குகைகள் ஆகியவற்றை குறிவைத்து சுமார் 27 நிலைகள் அளிக்கப்பட்டதாக துருக்கி ராணுவம் கூறியுள்ளது. இது தொடர்பாக குர்தீஷ் படை தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu