ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கோரம், அடானா, காசியன்டெப், ஆய்டின், கேசெரி, மெர்சின் ஆகிய மாகாணங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியில், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் துருக்கியில் அரங்கேறிய பல்வேறு தாக்குதல்களுக்கு ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்தான்புல் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்த இயக்கத்துக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பெயரில் துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை மேற்கொண்டு 38 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தேடுதலின் போது அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.