துருக்கியில் கத்திக்குத்து சம்பவம் -5 பேர் காயம்

August 14, 2024

துருக்கியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். துருக்கி நாட்டில் உள்ள எஸ்கிசிர் நகரில் தேநீர் கடை ஒன்றில் கத்திகுத்து சம்பவம் நடைபெற்றது. அங்கு கடையில் வாடிக்கையாளர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி துளைக்காத கவச உடையை அணிந்து, கத்தியுடன் மர்ம இளைஞர் ஒருவர் சரமாரியாக அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் குறித்து விவரம் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு […]

துருக்கியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

துருக்கி நாட்டில் உள்ள எஸ்கிசிர் நகரில் தேநீர் கடை ஒன்றில் கத்திகுத்து சம்பவம் நடைபெற்றது. அங்கு கடையில் வாடிக்கையாளர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கி துளைக்காத கவச உடையை அணிந்து, கத்தியுடன் மர்ம இளைஞர் ஒருவர் சரமாரியாக அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் குறித்து விவரம் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர் பெயர் அர்ட்டா என்று போலீசார் கண்டறிந்தனர். அவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu