நீங்கள் இறப்பீர்கள் என இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் எச்சரிக்கை

October 12, 2023

ஹமாஸ் தாக்குதலில் நீங்கள் இறப்பீர்கள் என இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் ஹமாஸ் போரில் அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை ஈரான், கத்தார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதல் வீடியோவை […]

ஹமாஸ் தாக்குதலில் நீங்கள் இறப்பீர்கள் என இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் ஹமாஸ் போரில் அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை ஈரான், கத்தார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதல் வீடியோவை x சமூக ஊடகத்தில் இஸ்ரேல் பிரதமர் பகிர்ந்து உள்ளார். அதில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல் நடத்திய காட்சியை பகிர்ந்து உள்ளார். அத்துடன் எங்கள் முழு பலம் கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று கூறியுள்ளார். இதற்கு துருக்கியின் கல்வித்துறை துணை மந்திரி நஜீப் இல்மாஸ் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு நாள் உங்கள் மீதும் தாக்குதல் நடைபெறும். நீங்கள் மரணம் அடைவீர்கள் என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu