தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

January 11, 2024

இன்று வங்க கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் சுழல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும். மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு […]

இன்று வங்க கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் சுழல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும். மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu