கண்ணாடி போன்ற தொலைக்காட்சி - எல்ஜி அறிமுகம்

January 10, 2024

எல்ஜி நிறுவனம் கண்ணாடி போன்ற தொலைக்காட்சியை வடிவமைத்துள்ளது. டிரான்ஸ்பரென்ட் ஓ எல் இ டி சிக்னேஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியின் திரை, ஒளி ஊடுருவும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவனம் வடிவமைத்துள்ள புதிய தொலைக்காட்சி 38% ஊடுருவும் கண்ணாடி கொண்டுள்ளது. மேலும், தொலைக்காட்சிகளுக்கு கம்பி இணைப்புகள் கிடையாது. தொலைக்காட்சியுடன் பிரத்தியேகமாக வழங்கப்படும் ஜீரோ கனெக்ட் பாக்ஸ் மூலம் ஒலி ஒளி பரிமாற்றம் செய்யப்பட்டு திரையில் காட்சிகளை காண முடியும். இது உலகின் முதல் கம்பி இணைப்பற்ற […]

எல்ஜி நிறுவனம் கண்ணாடி போன்ற தொலைக்காட்சியை வடிவமைத்துள்ளது. டிரான்ஸ்பரென்ட் ஓ எல் இ டி சிக்னேஜ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சியின் திரை, ஒளி ஊடுருவும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்ஜி நிறுவனம் வடிவமைத்துள்ள புதிய தொலைக்காட்சி 38% ஊடுருவும் கண்ணாடி கொண்டுள்ளது. மேலும், தொலைக்காட்சிகளுக்கு கம்பி இணைப்புகள் கிடையாது. தொலைக்காட்சியுடன் பிரத்தியேகமாக வழங்கப்படும் ஜீரோ கனெக்ட் பாக்ஸ் மூலம் ஒலி ஒளி பரிமாற்றம் செய்யப்பட்டு திரையில் காட்சிகளை காண முடியும். இது உலகின் முதல் கம்பி இணைப்பற்ற தொலைக்காட்சி என சொல்லப்பட்டுள்ளது. கண்ணாடி போன்ற திரையை சாதாரண தொலைக்காட்சி திரை போல மாற்றிக் கொள்ளும் அம்சமும் தொலைக்காட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் நடக்க உள்ள சி இ எஸ் நிகழ்வில் இந்த தொலைக்காட்சியை காட்சிப்படுத்த உள்ளதாக எல் ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் போது, இந்த தொலைக்காட்சியின் விலை, சந்தை வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu