டிவிஎஸ் மோட்டார் பங்குகள் 6% உயர்வு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 15% உயர்ந்து 387 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 10042 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024 ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்தமாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 1686 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கான செயல்பாட்டு வருவாய் 39145 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டிவிஎஸ் நிறுவனத்தின் […]

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 15% உயர்ந்து 387 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 10042 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024 ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்தமாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 1686 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கான செயல்பாட்டு வருவாய் 39145 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டிவிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 22% உயர்ந்து 10.63 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 6% அளவுக்கு டிவிஎஸ் மோட்டார் பங்கு மதிப்பு உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் 2121.3 ரூபாய் ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் 2123 ரூபாய் ஆகவும் டிவிஎஸ் மோட்டார் பங்கு மதிப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu