ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த இரட்டை கேலக்ஸிகள் புகைப்படம் - நாசா பகிர்வு

அடுத்தடுத்து இருக்கும் 2 கேலக்ஸிகளின் புகைப்படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது, நமது பால்வீதி மண்டலம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. புகைப்படத்தில், முனைப்பகுதி தெரியும் வகையில் இருக்கும் கேலக்ஸி NGC 4302 எனவும், சற்றே சாய்வாக இருக்கும் கேலக்ஸி NGC 4298 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அடுத்தடுத்து இருக்கும் 2 கேலக்ஸிகளின் புகைப்படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

வெளியிலிருந்து பார்க்கும்போது, நமது பால்வீதி மண்டலம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. புகைப்படத்தில், முனைப்பகுதி தெரியும் வகையில் இருக்கும் கேலக்ஸி NGC 4302 எனவும், சற்றே சாய்வாக இருக்கும் கேலக்ஸி NGC 4298 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகருகே இருப்பது போல தோற்றமளித்தாலும், இவை இரண்டும் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தாலும், இரண்டு கேலக்ஸிகளும் வெவ்வேறு தன்மை உடையவை என கூறப்பட்டுள்ளது. “இரண்டு அண்டை கேலக்ஸிகளும், விண்வெளியில் தங்களுக்கே உரிய பாணியில் ஊடாடி வருகின்றன” என்ற தலைப்போடு இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu