உலக அளவில் பிரபலமான வீடியோ தளமாக யூடியூப் உள்ளது. அதற்கு போட்டியாக, ட்விட்டர் நிறுவனம் புதிய வீடியோ தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ட்விட்டர் பயனர் ஒருவருக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ள ட்விட்டர் பதிவில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு, 2 மணி நேர வீடியோவை பதிவிடும் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர், "தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ட்விட்டர் வீடியோவை பார்க்க முடிவதில்லை. எனவே, ஸ்மார்ட் டிவியில் இதற்கான பிரத்தியேக செயலியை உருவாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், "ட்விட்டர் ஸ்ட்ரீமிங் செயலி விரைவில் வெளியாகும்" என்று எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். எனவே, வீடியோ கன்டென்ட் கிரியேட்டர்களுடன் இணைந்து ட்விட்டர் நிறுவனம் வீடியோக்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, யூடியூப் தளத்திற்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.