கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொலை

April 10, 2024

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூட்டா சிங் கில், கனடாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பூட்டா சிங் கில் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஆக உள்ளார். கனடாவில் வசிக்கும் பஞ்சாபி சமூகத்தினர் இடையே அதிக செல்வாக்கு உள்ளவராக அறியப்படுகிறார். இந்த நிலையில், அவர் மீதும், அவருடன் இருந்த 2 நண்பர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர் நடத்திய […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூட்டா சிங் கில், கனடாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பூட்டா சிங் கில் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஆக உள்ளார். கனடாவில் வசிக்கும் பஞ்சாபி சமூகத்தினர் இடையே அதிக செல்வாக்கு உள்ளவராக அறியப்படுகிறார். இந்த நிலையில், அவர் மீதும், அவருடன் இருந்த 2 நண்பர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், பூட்டா சிங் மற்றும் அவரது ஒரு நண்பர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த மற்றொரு நண்பருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu