ஜிபூட்டி கடற்பகுதியில் இரண்டு அகதிகள் படகுகள் மூழ்கியதில் 45 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஜிபூட்டி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். அதன் வடக்கில் எரித்திரியா, மேற்கு மற்றும் தெற்கில் எதியோப்பியா, மற்றும் தென்கிழக்கில் சோமாலியா அமைந்துள்ளன. இந்நாட்டின் மீதமுள்ள எல்லைகள் ஏடன் குடா மற்றும் செங்கடலால் சூழப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜிபூட்டி கடற்பகுதியில் இரண்டு அகதிகள் படகுகள் மூழ்கியதில் குறைந்தது 45 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துக்குள்ளான படகுகள் 310 பேருடன் ஏமனிலிருந்து புறப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்னும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.