அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் உலககோப்பை செஸ் தொடருக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இரண்டு சுற்றும் டிராவில் முடிந்துள்ளது.
உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா 22 ஆம் தேதி வெள்ளை நிற காய்களுடன் தனது விளையாட்டை தொடங்கினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இப்போட்டியில் போட்டியை டிராவில் முடிப்பதாக இரு போட்டியாளர்கள் அறிவித்தனர்.அதன் பின்னான இறுதி போட்டிக்கான இரண்டாவது சுற்று நேற்று தொடங்கப்பட்டது. இதில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்துள்ளது. இதனால் இன்று டை பிரக்கேர் சுற்று இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.