சீனாவில் கெய்மி புயலால் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைவானில் கெய்மி புயல் உருவானது. இதில் அங்கு இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த புயல் மேலும் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக அங்கு கனமழை பெய்தது. சீனாவின் 12 நகரங்களில் 40 செண்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு கூட்டி செல்கின்றனர். அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.