உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட யு.ஜி.சி. அனுமதி 

உயர்க்கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட யு.ஜி.சி அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் பல்கலைக்கழக மானியக் குழுவால் இதுவரையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் கீழ்க்கண்ட திட்டங்கள் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, ‘ஸ்வயம்’ திறந்த நிலை ஆன்லைன் படிப்புகள், மின் உள்ளடக்க மேம்பாட்டு திட்டம், சமூக கொள்கை ஆய்வுக்காக […]

உயர்க்கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 23 திட்டங்கள் தொடர்ந்து செயல்பட யு.ஜி.சி அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மனிஷ் ஜோஷி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் பல்கலைக்கழக மானியக் குழுவால் இதுவரையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் கீழ்க்கண்ட திட்டங்கள் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, ‘ஸ்வயம்’ திறந்த நிலை ஆன்லைன் படிப்புகள், மின் உள்ளடக்க மேம்பாட்டு திட்டம், சமூக கொள்கை ஆய்வுக்காக பல்கலைக்கழகங்களில் மையங்களை நிறுவுதல், உயர்கல்வி நிறுவனங்களின் பெண்கள் படிப்புக்கான திட்டம், கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான பயிற்சி திட்டங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம், ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழக மானியக்குழு ஆராய்ச்சி விருதுகள் உள்பட 23 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu