இங்கிலாந்து நாட்டில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அங்கு விமான சேவை பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்கள் அனைத்தும் தானியங்கி முறையில் இயங்காமல் போனது. இதனால் விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாடு மையத்துக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் தாமதமாக புறப்பட வேண்டி இருந்தது. எனினும் விமான சேவை முழுமையாக முடங்கவில்லை. இதன் காரணமாக பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.