இங்கிலாந்து அரசு வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, பங்கேற்று ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு கிளர்ச்சியில் ஈடுபட்டது. பின்னர் அதை கைவிட்டது. இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து வாக்னர் குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.