இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி வெற்றி - கெய்ர் ஸ்டார்மர் பிரதமர்

July 5, 2024

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதையடுத்து அதன் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. இங்கிலாந்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே கன்சர்வேட்டிவ் கட்சி பின்னிலையில் இருந்தது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மேலும் 136 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. […]

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதையடுத்து அதன் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 650 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே கன்சர்வேட்டிவ் கட்சி பின்னிலையில் இருந்தது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மேலும் 136 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இங்கிலாந்தின் புத்தகத்துக்காக நாங்கள் பாடுபடுவோம். நாடுதான் முதலாவது, கட்சி இரண்டாம் பட்சம்தான் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு முழு பொறுப்பு ஏற்பதாக ரிஷி சுனக் கூறியுள்ளார். அவர் ரிஷிமெண்ட் பகுதியில் வெற்றி பெற்று தனது எம்பி பதவியை தக்க வைத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu