உலகிலேயே முதல் முறையாக, நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான தடுப்பூசியை தயாரிக்கும் ஆராய்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும், பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட் மற்றும் யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகளும் நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கண்டுபிடிக்கும் தடுப்பூசி LungVax என்று அழைக்கப்பட உள்ளது. இது ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தயாரித்த கோவிட் தடுப்பூசி போலவே இருக்கும் என சொல்லப்படுகிறது. மொத்தமாக 3000 டோர்ஸ் தடுப்பூசிகளை தயாரிக்க இந்த குழு திட்டமிட்டுள்ளது/ பிரிட்டனை பொறுத்தவரை, நுரையீரல் புற்றுநோய் அதிகமாக காணப்படுவதால் இந்த ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், “நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் புகைப்பழக்கம். LungVax, 90 சதவீத நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளை குணப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஆனால், புகைப் பழக்கத்தை கைவிடுவது ஒன்றுதான் நுரையீரல் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.